History
Icon-add-to-playlist Icon-download Icon-drawer-up
Share this ... ×
...
By ...
Embed:
Copy
Nagi-Narayanan -Thodi Raagam
Clean
January 09, 2009 02:54 PM PST

Nagi-Narayanan -Thodi Raagam

அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான
வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும்
கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத்
தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு
தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது
எனக்கு உதவும்.

இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம்.
72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான
"நேத்ர" சக்ரத்தில் இது இரண்டாவது ராகம். கடபயாதி ஸங்க்யை முறைப்படி
இதை "ஹனுமதோடி" என்று அழைப்பார்கள்.
இதன் ஆரோஹண அவரோஹணத்தை இப்போது கூறுகிறேன்.
ஸ, ரி1, க2, ம1, ப, த1, நி2, ஸ்
ஸ், நி2, த1, ப, ம1, க2, ரி1, ஸ
அதாவது, இதன் ஸ்வரங்கள், ஸ (ஷட்ஜம்), சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம்,
சுத்த மத்யமம், ப(பஞ்சமம்), சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் மற்றும் மேல் ஷட்ஜம்.
இது கர்நாடக இசையில் ஒரு முக்கியமான ராகமாகும். இதற்குப் பல ஜன்ய
ராகங்களை உற்பத்தி செய்த பெருமை உண்டு. இந்த ராகத்தைப் பாடும்போது
ஜண்டை ஸ்வரங்களாக 'கக மம தத, மம தத நிநி, தத நிநி ஸ்ஸ்'
என்ற ப்ரயோகங்களை உபயோகப்படுத்தி, பாடலுக்கு அழகு சேர்ப்பார்கள். இன்னும்
முக்கியமாக தாடுஸ்வர ப்ரயோகங்களாக, 'நிகரிநித நிரிநிதம கமநிதம காரிஸா' போன்ற
ப்ரயோகங்கள் கச்சேரியை களை கட்டச் செய்து விடும். பஞ்சமத்தை உபயோகிக்காமல்,
'தநிஸதா, ரிஸதா' என்று சிலர் சில இடங்களில் பாடுவார்கள் - இவை 'பஞ்சம வர்ஜப்ரயோகங்கள்'
என்று அழைக்கப்படுபவை - கேட்பதற்கே ரம்யமாக இருக்கும்.
உதாரணத்திற்கு, பட்டணம் சுப்ரமண்ய அய்யருடைய "ஏராநாபை" என்று ஆரம்பிக்கும்
தோடி வர்ணத்தில், சரணத்தில்,
'தநிதகரிரி மகரிஸ நிகரிஸநித நிகரி நிரிநிதநி தகரிநிதமதநி (ஏராநாபை..)
என்று வரும். இந்த ஸ்வரங்களில் பார்த்தீர்களானால், பஞ்சமமே வராது. அதில் ஒரு தனி
அழகு இருக்கிறது.
ஹிந்துஸ்தானி இசையில் இதற்கு இணையானது பைரவி தாட். அவர்கள் இதை ஒரு காலையில் பாடும்
ராகமாகக் கருதுகிறார்கள். ஹிந்துஸ்தானி இசையின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வெவ்வேறு.
அவர்களது தோடி நமது சுபபந்துவராளியைப்போல் இருக்கும்.

இந்தத் தோடி ராகத்தின் சரித்திரம் என்று பார்த்தால்,
பழங்காலத்திலிருந்து இந்த ராகத்தைப்பற்றி முக்கியமான பல புத்தகங்களில் எழுதப்பட்டு உள்ளது.
11ம் நூற்றாண்டின் பாரஸ்வதேவா அவர்கள் எழுதிய "ஸங்கீத சமய ஸாரா",
13ம் நூற்றாண்டின் "ஸங்கீத ரத்னாகரம்",
14ம் நூற்றாண்டின் லோசன கவி அவர்கள் எழுதிய "ராக தரங்கிணி",
1609 இல் ஸோமநாதரால் எழுதப்பட்ட "ராகவிபோதா",
1735 இல் துளஜா மஹாராஜாவால் எழுதப்பட்ட "ஸங்கீத ஸாராம்ருதா",
18-19ம் நூற்றாண்டில் கோவிந்தாச்சார்யா அவர்களால் எழுதப்பட்ட
"ஸங்க்ரஹ சூடாமணி" போன்ற புத்தகங்களில் தோடி ராகத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், ஸரபோஜி மஹாராஜாவின் சபையில்
தோடி ஸீதாராமைய்யா என்ற ஒரு புகழ் பெற்ற பாடகர் இருந்தார். அவர் இந்த
ராகத்தை எட்டு நாட்களுக்கு நிறுத்தாமல் பாடினாராம். இது ஒரு முறியடிக்கப்படாத
சாதனையாகும். இதனாலேயே அவருக்கு "தோடி ஸீதாராமைய்யா" என்ற பெயர் வந்தது.
ராக ஆலாபனை செய்வதில் படிப்படியாக முன்னேறிச் செல்வதற்கு சில முறைகள் உண்டு.
அதன்படி அவர், அக்ஷிப்தா, ராகவர்தனி, ஸ்தாயி, மற்றும் மகரிணி என்ற வழிமுறைகளில்
பாடி அதன் பிறகு முறையாக ஒரு அமர்க்களமான பல்லவி பாடி நிறைவு செய்தாராம்.
கேட்பதற்கே மலைக்கிறது. இவர் சில சமயங்களில் தனக்கு பணத்தேவை ஏற்படும் நேரங்களில்
கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தான் பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுக்கும்
வரை இந்த ராகத்தைப் பாடுவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு,தன்னுடைய சொத்தான
இந்தத் தோடி ராகத்தை அடகு வைப்பாராம் !!!

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்றே பெயர்
பெற்றவர். அவர் தோடி ராகம் வாசிப்பதில் மன்னன். தஞ்சாவூர், திருவிடைமருதூர்,
திருவாவடுதுறை, மற்றும் திருப்பனந்தாள் போன்ற கோவில்களின் விழாக்களில் அவர்
வாசித்த தோடி அதி அற்புதமானது. செவிகளுக்கு ஒரு பெரிய விருந்து. இந்தத் தோடி
ராகத்தை அவர் மணிக்கணக்கில் விரிவாக வாசிப்பார். சில நேரங்களில் இரவு முழுவதும்
கணக்கில்லாத கற்பனைகளுடன் வாசித்துக் கொண்டே இருப்பார். ரசிகர்களும் மெய்மறந்து
கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தோடி ராகம் இவருடைய வீட்டுச் சொத்து என்றே
மக்கள் கருதினார்கள்.
ஒருமுறை திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி அவர்கள் திரு.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்
அமர்ந்திருந்த ஒரு சபையில் தோடி ராகம் பாடினாராம். கச்சேரி முடிந்ததும் ராஜரத்தினம்
பிள்ளை அவர்கள், எம்.எல்.வி அவர்களை அற்புதமாகப் பாடியதற்குப் பாராட்டினாராம்.
நாதச் சக்கரவர்த்தி அவர்களின் வாயால் கிடைத்த இந்தப் பாராட்டு மிகப் பெரியது.

மதுரை மணி அய்யர் அவர்கள் "கொலுவமரகதா", "தாயே யசோதா" போன்ற பாடல்களை
தன் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தினார்.

திரு.ராமஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் ஒரு ஸ்வராக்ஷர வர்ணம் இயற்றியுள்ளார்.
ஸ்வராக்ஷரம் என்றால், ஸ்வரங்களே வார்த்தைகளாக இருக்கும். உதாரணத்திற்கு,
அதன் பல்லவி இப்படி இருக்கும் -
ஸரிகாநி, தாநி, பாமரினி, நீ பத
ஸமாகமமாக நீகநிநிஸா
இது கேட்பதற்கு ஏதோ ஸ்வரங்களைப் படிப்பது போல் இருக்கும். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கும். இதே போல திரு. பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள் தெலுங்குப் பாடல்ஒன்று இயற்றியுள்ளார்.
அதன் பல்லவி இப்படி இருக்கும் -
மா மானினி நீ தாம கனி
நீ தாஸரினி காதா

இப்படி இந்த ராகத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த ராகம் பக்தி மற்றும் கருணை ரஸத்தை எழுப்பும். அதனால்தான் இந்த ராகத்திலும் இதன் ஜன்ய ராகங்களிலும் பல பக்திப்பாடல்கள் உள்ளன. இந்த ராகத்தில் கீர்த்தனைகள், ஸ்லோகங்கள், விருத்தங்கள், பத்யங்கள் என்று எல்லா வகையான பாடல்களையும் பாடுவார்கள். பெயர் பெற்ற பெரிய மற்றும் சிறிய பாடலாசிரியர்கள் இந்த ராகத்தில் பல பாடல்கள் புனைந்துள்ளார்கள். மிக நீண்ட ஆலாபனை செய்வதற்கு இடம் கொடுக்கும் ஒரு ராகம் இது.
நாட்டிய நாடகங்களிலும் இந்த ராகத்தை உபயோகப்படுத்துவார்கள். இந்த ராகத்தை எல்லா நேரங்களிலும் பாட முடியும்.
தமிழிசையின் "மத்தகோகிலம்" என்ற ராகம் இதை ஒத்தது.

இந்த ராகத்தில் அமைந்த சில கர்நாடக இசைப்பாடல்களை இப்போது பார்க்கலாம்.
முதலில் வர்ணம் -
"ஏராநாபை.. இந்த சௌக.. சேய மேர காதுரா...நா ஸாமி..."
இது பட்டணம் சுப்பிரமண்ய அய்யர் அவர்கள் இயற்றியது.
தியாகராஜர் இந்த ராகத்தில் பல கீர்த்தனைகள் செய்துள்ளார். அவற்றில் சில,
முதலில்,
"கொலுவமரகத கோதண்டபாணி..",

இன்னொன்று,
"சேசினதெல்ல மரசிதிவோ"

"கத்தனுவாரிகி.கத்து.",
இன்னொன்று,
"தாசரதே"...,

இன்னொன்று,
"ஏமி ஜேசிதேனே..மி" இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திரு.பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய,
"கார்த்திகேய காங்கேய கௌரி தனயா" என்ற பாடல் மிகப் பிரஸித்தம்.
கமலாம்பா நவாவர்ண கீர்த்தனைகளில் முத்துஸ்வாமி தீக்ஷிதர்
அவர்கள் இந்த ராகத்திலும் இயற்றி இருக்கிறார்.
"கமலாம்பிகே ஆச்ருத கல்பலதிகே..." என்று வரும் இந்தப்பாடல்.
ச்யாமா சாஸ்த்ரி அவர்கள், "நின்னே நம்மி நானு" என்ற கீர்த்தனையை
இயற்றி உள்ளார். அவர் இயற்றியுள்ள,
"ராவே ஹிமகிரிகுமாரி கஞ்சி காமாக்ஷி" என்ற ஸ்வரஜதி மிக அழகாக இருக்கும்.
ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் அவர்கள் இயற்றிய ஒரு பதம் மிக மிகப்
பிரபலம் - "தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன்
செய்யும் ஜாலத்தைக் கேளாய்" என்ற இந்தப் பாடலை நீங்கள் கண்டிப்பாகக்
கேட்டிருப்பீர்கள்.
கேரளத்து மஹாராஜா ஸ்வாதி திருநாள் அவர்கள் இந்த ராகத்தில் சில கீர்த்தனைகளை
இயற்றியுள்ளார்.
"பாரதி மாமவ க்ருபயா..." என்று ஒரு கீர்த்தனை உண்டு. இது நவராத்திரியின்
ஐந்தாவது ராத்திரிக்கான கீர்த்தனை.
இன்னும் இந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்காக
சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

திரை இசைப் பாடல்கள் அவ்வளவாக இந்த ராகத்தில் இல்லை.
ஒரு சிலவற்றை உதாரணத்திற்குச் சொல்கிறேன்.

முதலில்,

'திருவிளையாடல்' படத்தில் "ஒரு நாள் போதுமா" என்ற பாடலில்
"இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ எழுந்தோடி...தோடி....." என்று மிக அழகாக
தோடி ராகத்தைக் கோடி காட்டுவார் திரு. பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள்.

இன்னொன்று,
'வருஷம் 16' என்ற படத்தில் வரும்,
"கங்கைக்கரை மன்னனடீ. கண்ணன் மலர்க் கண்ணனடீ
வங்கக் கடல் வண்ணனடீ உள்ளம் கவர் கள்வனடீ .". மிக அழகாக மிஸ்ர சாபு தாளத்தில்
அமைந்துள்ள இந்தப்பாடலை திரு.ஜேசுதாஸ் அவர்கள் அற்புதமாகப் பாடி உள்ளார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் தோடி ராகத்தை
மிக லாகவமாகக் கையாண்டுள்ளார்.
இந்தப்பாடலை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தில் நீங்கள் கேட்கலாம் -
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=4103

'வணங்காமுடி' படத்தில் வரும்,
"நீயே கதி ஈஷ்வரீ" என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளதை எல்லா வலைத்தளங்களும் உறுதியாகக்
கூறுகின்றன. ஆனால் அந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. ஆகவே அதைப் பாடிக் காட்டமுடியாததற்கு மன்னிக்கவும். அதே போல,
"தோடி ராகம்" என்று ஒரு திரைப்படமே வந்துள்ளது. அதில் கர்நாடக இசைப்
பாடகர் திரு.சேஷகோபாலன் அவர்கள் நடித்துள்ளார். எவ்வளவோ முயன்றும்
துரதிருஷ்ட வசமாக எனக்கு அதன் பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு கிடைக்க
வில்லை. உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் கேட்டுப் பார்க்கவும்.

சரி நேயர்களே, அடுத்து வேறொரு ராகத்தோடு உங்களைச் சந்திக்கும் வரை
உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது, பெங்களூரிலிருந்து
நாகி நாராயணன்.

Independance Day special :"மக்களுக்கு, ம‌க்களுக்காக‌, ம‌க்க‌ளுக்கே!" - ஆல்ப‌ர்ட்
Clean
August 15, 2008 12:13 PM PDT
itunes pic

Covered by http://www.adhikaalai.com

கவிஞர் சுகிர்தராணி- Interview Part 3
Clean
June 12, 2008 07:56 PM PDT
itunes pic

கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.

"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"என் கண்களின் ஒளிக்கற்றைகள்

முன்னறையில் உறங்குபவனின்

ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.

கோப்பை நிறைய வழியும் மதுவோடு

என்னுடல் மூழ்கி மிதந்தது.

கூசும் வார்த்தைப் பிரயோகங்களை

சன்னமாய் சொல்லியவாறு

சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

பறவைகளின் சிறகோசை கேட்டதும்

என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு

ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்

தோலுரிக்கும்போது

காகம் விரட்டுவேன்

வெகு நேரம் நின்று வாங்கிய

ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு

சுடுசோறெனப் பெருமை பேசுவேன்

தப்பட்டை மாட்டிய அப்பா

தெருவில் எதிர்ப்படும்போது

முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்

அப்பாவின் தொழிலும்

ஆண்டு வருமானமும்

சொல்ல முடியாமல்

வாத்தியாரிடம் அடி வாங்குவேன்

தோழிகளற்ற

பின் வரிசையிலமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது

யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம். உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார்.

அவருடைய பேட்டி ஒலி வடிவில்...

சந்திப்பு :'அதிகாலை’ அசோக் - ராஜேந்திரன்.

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 2
Clean
June 12, 2008 07:45 PM PDT
itunes pic

http://www.adhikaalai.com

part 2 interview
கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.

"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 1
Clean
June 12, 2008 07:38 PM PDT
itunes pic

exclusively covered by http://www.adhikaalai.com

கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.

"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"என் கண்களின் ஒளிக்கற்றைகள்

முன்னறையில் உறங்குபவனின்

ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.

கோப்பை நிறைய வழியும் மதுவோடு

என்னுடல் மூழ்கி மிதந்தது.

கூசும் வார்த்தைப் பிரயோகங்களை

சன்னமாய் சொல்லியவாறு

சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

பறவைகளின் சிறகோசை கேட்டதும்

என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு

ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்

தோலுரிக்கும்போது

காகம் விரட்டுவேன்

வெகு நேரம் நின்று வாங்கிய

ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு

சுடுசோறெனப் பெருமை பேசுவேன்

தப்பட்டை மாட்டிய அப்பா

தெருவில் எதிர்ப்படும்போது

முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்

அப்பாவின் தொழிலும்

ஆண்டு வருமானமும்

சொல்ல முடியாமல்

வாத்தியாரிடம் அடி வாங்குவேன்

தோழிகளற்ற

பின் வரிசையிலமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது

யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம். உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார்.

அவருடைய பேட்டி ஒலி வடிவில்...

சந்திப்பு :'அதிகாலை’ அசோக் - ராஜேந்திரன்.

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini
Clean
June 07, 2008 12:17 PM PDT
itunes pic

exclusively covered by http://www.adhikaalai.com

அரங்கில் அதிகமான கைத் தட்டல்களை அள்ளிச் சென்ற கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். தந்தைக்கு மகள் எழுதும் கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது.

"நேரில் சந்திக்கத்தான்
நினைத்திருந்தேன் தந்தையே..
ஆனால் ஐயா சண்முகநாதனிடம்
சதிராட்டம் ஆட முடியாது ..
அதனால்... என் கவிதைத் தூது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
உன்னைப் பெற்றால்தான்
சொற்கள்ஞ்சியமாகியது.
உனக்கு
கடவுள் நம்பிக்கை இல்லை.
ஆனால் நீதான் அப்பா
எங்கள் தமிழ்க் கடவுள்.
எப்போதும்
உன் அருகிருக்கும்
வள்ளிக்கு ஒரு வணக்கம்.
தெய்வானைக்கும் ஒரு வணக்கம்..."என்றபோது ஆரவாரத்தின் உச்சம் அதிகமானது.

எம்பி.சீட், எம் எல் ஏ.சீட்,
வாரியத் தலைவர் பதவி என்று
எதுவும் வேண்டாம் அப்பா..
உங்கள் தமிழ் உள்ளத்தில்
ஓரமாய் சிறு இடம்
அது போதும் எனக்கு ....” என்ற போது இலக்கியத் தோழிகள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்.சல்மா ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை செய்து கொண்டனர்.

வெள்ளுடையில் உடை உடுத்தி, அழைத்து வந்த உதவியாளரிடம் கவிதைக் காகிதம் வாங்கி,குரல் செருமி ஆரம்பித்தார் வைரமுத்து.சித்த வைத்தியத்தை பக்குவமாய்ச் சொன்னார்.அதைஎல்லாம் விட கலைஞரின் இளமைக்கு காரணம் திராவிட லேகியம் என்றார்.வைரமுத்துவின் கவிதைகளில் அவரின் ஒலியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.ரசிகர்களின் கை தட்டலகளை அவ்வளவாகப் பெறவில்லை.

ஒகனேக்கல் திட்டம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சேது சமுத்திர திட்டம் என நடப்பு விவாகரங்கள் கவிதையாக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனை ராஜவைத்தியங்களின் 3 நாள் சிகிச்சையைவிட கவியரங்கத்தின் 2 மணி நேர ரசனை கலைஞரை நிறையவே உற்சாகப்படுத்தியது. அரங்கத்துக்குள் நுழைந்ததைவிட அவர் புறப்படும்போது அவரின் முகத்தில் அவ்வளவு அதிகமான பூரிப்பு.

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 3 :mehtha
Clean
June 07, 2008 12:16 PM PDT
itunes pic

exclusively covered by http://www.adhikaalai.com

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில்

அடுத்து மு.மேத்தா வந்தார்.

"தமிழ் நாட்டின் வரலாறும் ..
தலைவா உன் வரலாறும்
தனித்தனி இல்லை"
என்றார்.

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 2 Kavingar karunanithi
Clean
June 07, 2008 12:14 PM PDT
itunes pic

Exclusively covered by http://www.adhikaalai.com
கலைஞர் கருணாநிதியை புகழந்து கவிபாட கவிஞர் .கருணாநிதி. இவர் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழத் துறை விரிவுரையாளர்.

"என்னை ஏன் முதலில் அழைத்தீர்கள்
கருணாநிதி என்றால்
முதலில் வருவார் என்பதலா?
குடியரசு இதழில்
எழுதிய உன் கைகள்
குடிய்ரசுத் தலைவரையே
தேர்ந்தெடுக்கிறது.
இந்தியாவுக்குள்
தமிழகம் இல்லை.
இப்பொழுது
தமிழகத்துக்குள்தான் இந்தியா"

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 1: Kavikko
Clean
June 07, 2008 12:12 PM PDT
itunes pic

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில்:-

தமிழக முதல்வர் கலைஞரின் 85 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்.இந்தக் கவியரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் 4ந்தேதி மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.

கவியரங்கத்துக்கு கவிக்கோ.அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தார். வைரமுத்து, மு.மேத்தா, ஆண்டாள் பிரியதர்ஷ்னி, பேரா.செல்வகணபதி, மு.கருணாநிதி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்றனர்.

தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களை ஒரே மேடையில் பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாகவே கூடியிருந்தது . நிறையப் பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவியரங்கத்தை தொடங்கினார் கவிக்கோ. கலைஞருக்கு முதுகு வலி, நெஞ்சு வலி ஏன் வந்தது என்பது பற்றி சிறப்பாக ஆரம்பித்தார். குழாயடிச் சண்டைபோல் அழைத்து வரப்பட்ட மக்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது. "இங்கு ஒரு அரங்கம்; அங்கு ஒரு அரங்கமா? என கவிக்கோ சிறிது கோபப்பட்டார். இச்சசூழலில் மீண்டும் சலசலப்பு. ' கவனம் யாருக்கும் இங்கே இல்லையே...' எனக் கவிதையை நிறுத்திவிட்டு கூட்டத்தை நோக்கினார் அப்துல்ரஹ்மான்.

அப்பொழுது திடுதிடுவென சபாரி உடை அணிந்த உயரமான மனிதர்கள் கைகளில் வாக்கி டாக்கியுடன். முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்களிடம் ஏதோ முணுமுணுக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே வருகிறார்கள். கவியரங்கம் நிறுத்தப்படுகிறது. மேயர் மைக்கில் அறிவிக்கிறார் 'கவியரங்கத்தைக் காண நம் தமிழக முதல்வர் வந்து கொண்டிருக்கிறார்" என்று. கூட்டம் ஆச்சரியத்துடன் விசிலடிக்கிறது.

கலைஞர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக எந்த முன் அறிவிப்புக்களும் கிடையாது. திடீரென வீட்டிலிருந்து தனது மகள் கவிஞர் கனிமொழியைக் கூட்டிக் கொண்டு கவியரங்கத்துக்கு வந்து விட்டார். 85 வயது என்று காலம் கணக்குப் பார்த்துச் சொல்கிறது. கட்டாயம் ஓய்வு தேவை என மருத்துவ அறிக்கை கூறுகிறது.. நடந்தால் சாய்ந்து கொள்ள இரண்டு தோள்கள் தேவைப்படுகிறது. இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தமிழ் மீது கொண்ட காதலால் அந்த தமிழ்த்தேர் அசைந்து…அசைந்து அரங்கத்துக்குள் வந்த போது, கூட்டம் வாழ்க என்ற கோஷத்துடன் நீண்ட நேரம் கை தட்டி உற்சாகப்படுத்தியது.

முன்பு இருந்த சலசலப்புக்களை எல்லாம் நீக்கி விட்டு கூட்டம் அமைதி காத்தது. கவிஞர்கள் முகத்திலும் ஏக சந்தோசம். வாசிக்கப் போகும் கவிதயை தாம் நேசிப்பவரே கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் கவிஞர்கள் சந்தோசப்படாமல் என்ன செய்வார்கள்!

கவிக்கோ மீண்டும் ஆரம்பித்தார்.

"என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.
முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா...
எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.
ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் -
அது மே/பா மு.கருணாநிதி என்றது.
இரட்டை இலை விரித்து
நாட்டையே உண்டவர்களை
எச்சில் இலையாக்கி
குப்பைத் தொட்டியில்
எறிந்தாய் நீ.
நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.
சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது...
தமிழா விழித்துக் கொள்...
வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்....”

என்று ஏக கைதட்டல்களுடன் கவிதையை முடித்தார் கவிக்கோ.

Sirippu : Quick Titbit About Laugh : Albert from Chicago
Clean
June 03, 2008 08:26 AM PDT

Exclusive coverage: http://www.adhikaalai.com

Sirippu : Quick Titbit About Laugh :

Albert from Chicago talks about how laugh and smiles are important in life.

More Quick bits soon to follow

Next Page